“யாழ் நகரை  பசுமை  ஆக்குவோம்”  வேலைத்திட்ட  நாளை ஆரம்பம் – வடக்கு மாகாண ஆளுநர் அலுவலுகம் தெரிவிப்பு!

Monday, June 4th, 2018

“யாழ் நகரை  பசுமை  ஆக்குவோம்”  வேலைத்திட்ட ஆரம்பநிகழ்வு  நாளை (05.06.2018) நடைபெறவுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் ஆளுநர் அலுவலகம் ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது –

வடமாகாணசபை, யாழ் மாநகரசபை, ஆளுநர் செயலகம் இணைந்து நடாத்தும் “யாழ் நகரை  பசுமை  ஆக்குவோம்”  வேலைத்திட்ட ஆரம்பநிகழ்வு  நாளை (05.06.2018) நடைபெறவுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

குறித்த நிகழ்வு யாழ் பண்ணை  சுற்றுவட்ட முன்றலில் நாளை காலை 8 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது .

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாகாணசபை  உறுப்பினர்கள் உள்ளுராட்சி  சபை உறுப்பினர்கள்  திணைக்கள அதிகாரிகள் அரசியல்  பிரமுகர்கள்  பொதுமக்கள்  பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ள உள்ளனர்  என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: