யாழ்.நகரில் நாளைமுதல் கடைகளை திறக்க அனுமதி – சுகாதார பணிப்பாளர் அறிவிப்பு!

Wednesday, April 7th, 2021

யாழ்.நகர வர்த்தகர்களிடம் பெறப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளில் கொரோனா தொற்றுக்கு உள்ளானோரின் கடைகள் தவிர்ந்த ஏனைய கடைகளை நாளைமுதல் திறப்பதற்கு அனுமதிப்பதாக சுகாதார பணிப்பாளர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்..

இதுதொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்த அவர் –

கடந்த 26 ஆம் திகதிமுதல் யாழ்.நகரத்தில் உள்ள வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டு வர்த்தக நிலையங்களில் பணியாற்றுவோர் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில் குறித்த பணியாளர்களுக்கு இரண்டு தடவைகளாக பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதன் அடிப்படையில், தொற்று இனங்காணப்பட்டோரின் கடைகள் தவிர்ந்த ஏனைய கடைகளை நாளை காலைமுதல் திறப்பதற்கு அனுமதிப்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும் தற்போது பண்டிகை காலம் என்பதால் மக்கள் வழமை போன்று ஒன்று கூடல் செயற்பாடுகளில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

அத்தோடு யாழ்.நகரப் பகுதிகளில் வீதித் தடைகளை ஏற்படுத்தி பொதுமக்களை ஒன்று கூடாத வண்ணம் செயற்படவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்தோடு தற்போது அபாய நிலை இன்னும் நீங்கவில்லை எனவே தற்போதைய நிலையில் பொது மக்களை ஒன்று கூடலை தடுப்பதற்கு ரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

சட்ட விரோதமான முறையில் 300 இற்கு அதிகமாக வாகனங்கள் இறக்குமதி – பறிமுதல் செய்தது சுங்க திணைக்களம்!
விமர்சனங்களுக்கான சிறந்த பதில் வெற்றியாகும் - சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவிப்பு!
பிளாஸ்ரிக் மாலைகள் இடியப்பம் தட்டுகள் உட்பட 8 பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பொருட்களுக்கு விரைவில் த...