யாழ். நகரில் கண்டன ஆர்ப்பாட்டம்!

Tuesday, March 13th, 2018

அம்பாறை, கண்டி மாவட்டங்களில் முஸ்லிம் மக்களுக்கு எதிரான இனவாத வன்செயல்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று செவ்வாய்க்கிழமை(13) முற்பகல் 10.15 மணி முதல் யாழ். நகரில் கண்டன ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டது.

சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம் “தமிழ் – முஸ்லிம் – சிங்கள மக்களுக்கிடையிலான உறவை வலுப்படுத்தி, இனங்களுக்கிடையிலான ஒற்றுமையைக் கட்டியெழுப்புவோம்” எனும் தொனிப்பொருளில் இடம்பெற்றது.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு வெகுஜன அமைப்புக்கள் பல தமது ஆதரவினை வழங்கியிருந்ததுடன் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் இனவாத வன்செயல்களுக்கு எதிரான பல்வேறு சுலோகங்களையும் கைகளில் ஏந்தி எதிர்ப்பில் ஈடுபட்டனர்.

Related posts: