யாழ் நகரின் மத்தியில் திடீரென உருவான் பாரிய குழி – மக்கள் பெரும் அவதி!

Saturday, September 3rd, 2022


யாழ் நகரின் மத்தியில் பாரிய குழி  ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்

யாழ் மத்திய பேருந்து நிலையத்திற்கு பின்புறமாக உள்ள ஞானவைரவர் ஆலய வீதியில் வீதியின் நடுவே கழிவு நீர்செல்லும்  வாய்க்கால் ஒன்றில்

பாரிய குழி   ஏற்பட்டுள்ளதால் யாழ் நகரில்  பயணிக்கும் பொதுமக்கள் பாரிய இடையூறுகளை எதிர்நோக்கி வருகின்றனர் 

மாநகர சபைக்கு சொந்தமான குறித்தபகுதியில் வீதியில் நடுவில் போக்குவரத்துக்கு இடையூறாகவுள்ள குழி திருத்தப்படவோ அல்லது வீதியால் பயணிப்போருக்கு அவ்விடத்தில் பாரிய குழி உள்ளது என்ற எச்சரிக்கை  போடுவதற்கும் சம்பந்தப்பட்ட தரப்பினர் உரிய நடவடிக்கை எடுக்காமைக்கு பொதுமக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர் 

குறித்த குழி வீதியின் நடுவில் காணப்படுவதன் காரணமாக அவ்விடத்தில் விபத்துக்கள் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்கள் அதிகமாகவுள்ளது

Related posts:

யாழ். நகரிலும் அதனை அண்டியுள்ள பகுதிகளிலும் இரவு வேளைகளில் இடம்பெறும் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத...
பயங்கரவாதம் தொடர்பில் பிராந்திய மட்டத்தில் கவனம் செலுத்தப்பட வேண்டிய விடயங்கள் குறித்தும் பிரதமர் மஹ...
முறையான பேருந்து தரிப்பிட விவகாரம் - வடக்கு மாகாணத்தில் தனியார் பேருந்து சேவைகள் அனைத்தும் முற்றாக இ...