யாழ். நகரப் பகுதியில் பட்டப்பகலில் வீட்டுக் கூரை உடைத்து 50 பவுண் நகை கொள்ளை!

யாழ். நகரப் பகுதியில் பட்டப்பகலில் வீட்டுக் கூரை உடைத்து 50 பவுண் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் பிறவுண் வீதி கலட்டிச் சந்திப் பகுதியில் இன்று (10.12) காலை 10.30 மணியளவில் இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வீட்டில் இரு பெண் பிள்ளைகளும் ஒரு ஆண்பிள்ளையும் இருந்துள்ளனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆகையினால், தேவாலயத்திற்கு மூவரும் சென்றுள்ளனர்.
அந்த சமயம் பார்த்து வீட்டிற்கு சென்ற கொள்ளையர்கள் வீட்டின் கூரையை பிரித்து 50 பவுண் நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
தேவாலயத்திற்கு சென்ற மூவரும் வீட்டிற்கு வந்து பார்த்த போது, வீடு உடைக்கப்பட்டிருப்பதை அவதானித்து நகைகளைப் பார்த்த போது, நகைகளைக் காணவில்லை. உடனடியாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர். அந்த முறைப்பாட்டின் பிரகாரம், சம்பவம் நடந்த வீட்டில் பொலிஸார் விசாணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.
Related posts:
|
|