யாழ் நகரப் பகுதியில் திடீர் சுற்றிவளைப்பு – பலர் கைது!

யாழ்ப்பாணம் – நாவாந்துறை, பொம்மை வெளிப் பகுதியில் இன்று அதிகாலை 5 மணி முதல் 8 மணி வரை பொலிஸார் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
சுமார் 2 மணித்தியாலயத்திற்கு மேலாக இந்த சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது, பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்கள் மற்றும் கஞ்சா, ஹெரோயின் விற்பனையாளர்கள் என பலர் கைது செய்யப்பட்டதுடன், கஞ்சா மற்றும் ஹெரோயின்களும் மீட்கப்பட்டுள்ளன எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து கைது செய்யப்பட்டவர்கள் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
பொலிஸ் விசாரணையின் பின்னர் அவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமென யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Related posts:
அறிக்கையை விவாதித்த பின்னர் சட்டமா அதிபரிடம் கையளிப்பு!
சாவகச்சேரி வைத்தியசாலையில் விபத்து அவசர சிகிச்சைப் பிரிவு கட்ட நிர்மாணப்பணி நிறைவு!
17 பேர் ஜனாதிபதி தேர்தலுக்காக கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர் - மஹிந்த தேஷப்பிரிய!
|
|