யாழ்.நகரப் பகுதிகளில் பொலிஸாரின் ரோந்து நடவடிக்கை அதிகரிப்பு!

யாழ்.நகரிலும் நகரை அண்டிய புறநகர்ப் பகுதியிலும் ஆயுதம் தாங்கிய பொலிஸாரின் ரோந்து மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் இரவு வேளைகளில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. குற்றச் செயல்கள் மற்றும் ரௌடி குழுவினரின் அட்டகாசங்கள் போன்றவற்றை கட்டுப்படுத்தும் விதத்தில் பொலிஸாரின் கண்காணிப்பு, ரோந்து என்பன தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
முக்கிய சந்திகளில் தரித்து நிற்கும் பொலிஸார் சந்தேகத்திற்கு இடமாகச் செல்வோரை மறித்து சோதனை மேற்கொள்வதுடன் தீவிர விசாரணைகளுக்கும் உட்படுத்தி வருகின்றனர். அதனைவிட மோட்டார் சைக்கிளில் செல்வோர் மறிக்கப்பட்டு மது அருந்தி விட்டு பயணிக்கிறார்களா என்பதையும் வாய்ச் சோதனை மூச்சுக்கு உட்படுத்தி வருகின்றனர். குறிப்பாக யாழ்ப்பாணம், கோப்பாய் பொலிஸாரின் இந்த இரவு ரோந்து கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால் இரவு வேளைகளில் வீதிகளில் கூடி நிற்போர் விரைவாக வீடு திரும்பச் செல்கின்றனர்.
Related posts:
|
|