யாழ். தொழில்நுட்பக் கல்லூரிக்கு 70 கணனிகளைத் தருகிறது கொரியா!

யாழ்ப்பாணம் தொழில்நுட்பக் கல்லூரியின் கற்றல் செயற்பாட்டுக்காக கொரிய அரசு 70 கணனிகளை வழங்கிய நிலையில் மேலும் 70 புதிய கணனிகளை வழங்க அந்நாடு முன்வந்துள்ளதாக கல்லூரியின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
போர் நிறைவடைந்த காலத்தில் யாழ்.தொழில் நுட்பக் கல்லூரிக்கிருந்த பெரும் தேவைகளில் தொழில் நுட்பக்கூடம் ஒன்றை அமைத்து 2012ஆம் ஆண்டில் புதிதாக 70 கணனிகள் கொரிய அரசின் திட்டத்தின் கீழ் கல்வி வளர்ச்சிக்காக வழங்கப்பட்டன. அவ்வாறு வழங்கப்பட்ட கணனிகள் அதிக பாவனையால் தற்போது அதிக திருத்தங்களுக்கு உள்ளாகின்றன. இந்தப் பிரச்சினைக்கான தீர்வு தொழில் நுட்பக் கல்லூரிக்கு அன்பளிப்புச் செய்த கொரிய அரசிடம் கோரப்பட்பட்டது. அதனை ஏற்றுக்கொண்ட கொரிய அரசு மேலும் 70 புதிய கணனிகளை வழங்க முன்வந்துள்ளது. அத்தோடு தொழில் நுட்பக் கூடத்தையும் சீரமைத்து வழங்கவும் கொரியா முன்வந்துள்ளது.
சீரமைப்புப் பணிகள் மற்றும் புதிதாக வழங்கும் 70 கணனிகள் என்பவற்றின் செலவினமாக 7மில்லின் ரூபா கணிக்கப்பட்டுள்ளது. தற்போது சீரமைப்புப் பணிகள் இடம்பெறுகின்றன. அவை நிறைவுற்றதும் புதிய கணனிகளும் கிடைக்கும் என்றார்.
Related posts:
|
|