யாழ். திருநெல்வேலிச் சந்திப் பகுதியில் முச்சக்கர வண்டி திருட்டு !

யாழ். திருநெல்வேலிச் சந்திப் பகுதியில் வீதியில் தரித்து நின்ற முச்சக்கர வண்டி திருட்டுப் போயுள்ளது. நேற்றுச் செவ்வாய்க்கிழமை(04) காலை இத் திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த திருட்டுச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
யாழ். தட்டாதெருவைச் சேர்ந்த வர்த்தகரொருவர் திருநெல்வேலி நகர்ப் பகுதிக்கு நேற்றைய தினம் பொருட்கள் கொள்வனவு செய்வதற்காக வருகை தந்துள்ளார். பலாலி வீதியில் தனது முச்சக்கர வண்டியை நிறுத்தி விட்டுப் பொருட்கள் கொள்வனவு செய்வதற்காகச் சென்றுள்ளார்.
பொருட்களைக் கொள்வனவு செய்த பின்னர் குறித்த வர்த்தகர் மீண்டும் திரும்பி வந்து பார்த்த போது முச்சக்கர வண்டி தரித்து விடப்பட்ட இடத்திலிருந்து திருட்டுப் போயுள்ளமை தெரியவந்தது. சம்பவம் தொடர்பில் முச்சக்கர வண்டி உரிமையாளர் கோப்பாய்ப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
Related posts:
ஜப்பானால் இலங்கைக்கு பல மில்லியன் பெறுமதியான அம்புலன்ஸ் வண்டி நன்கொடை!
கம்போடியாவில் இலங்கை தூதரகம் விரைவில் அமைக்கப்படும் – ஜனாதிபதி!
ஓகஸ்ட் 5 இல் அனைத்துக்கும் தீர்வுகிட்டும் – ஈ.பி.டி.பியின் வேட்பாளர் தவநாதன் நம்பிக்கை!
|
|