யாழ்.சென்.பற்றிக்ஸ் கல்லூரிக்கு அருகில் இருந்து பேரழிவுகளை ஏற்படுத்தக்கூடிய வெடிபொருள்கள் மீட்பு – தீவிர விசாரரணையில் பொலிஸார்!

Tuesday, October 13th, 2020

யாழ்ப்பாணம் சென்பற்றிக்ஸ் கல்லூரியின் பின் பகுதியில் உள்ள குளத்திற்கு அண்மையில் இருந்து  ஆர்.டி.எக்ஸ் மற்றும் ரி.என்.ரி மருந்து கலக்கப்பட்ட 4 கிலோ 3 கிராம் வெடி மருந்து பொதி மற்றும் 10 ரெனரேட்டர்கள் என்பன விசேட அதிரடிப்படையினரால் இன்று மீட்கப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது –

யாழ்ப்பானம் விசேட அதிரடிப் படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையிலேயே குறித்த வெடிமருந்துகள் மீட்கப்பட்டுள்ளன.சென் பற்றிக்ஸ் கல்லூரிக்கு பின்புறம் உள்ள குளத்தின் அருகில் இந்த வெடிமருந்துகள் மறைத்து வைக்கப்பட்டுள்ளன என்று விசேட அதிரடிப் படையினருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதனடிப்படையில் விசேட அதிரடிப் படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பு தேடுதலின் போது பொலித்தீன் பையில் சுற்றி வைக்கப்பட்ட நிலையில் டிஎன்டி மற்றும் ஆர்டிஎக்ஸ் வெடி மருந்துகள் கலக்கப்பட்ட 4 கிலோ 3 கிராம் வெடிமருந்து மீட்கப்பட்டுள்ளன.அத்துடன் 10 ரெடினேற்றர் ஆகியன மீட்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் விசேட அதிரடிப் படையின் பொலிஸ் பரிசோதகர் எம்.ஏ.பகட் தலைமையிலான குழுவினரே குறித்த சுற்றிவளைப்பில் ஈடுபட்டதுடன் வெடிமருந்தையும் மீட்டனர்.

இவ்வாறு மீட்கப்பட்ட வெடி மருந்து மற்றும் ரெடினேற்றர்கள் ஆகியன யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒல்படைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts:


எதிர்வரும் 21ஆம்முதல் வடமாகாண மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசி வழங்க ஏற்பாடு – தவறாது பெற்றுக்கொள்ளுமாற...
யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றங்களின் பெண் அரசியல் பிரதிநிதிகளுக்கு விசேட பயிற்சி வழங்கும்...
போக்குவரத்து விதிகளை மீறிய குற்றத்திற்காக வழக்கு தொடர போவதில்லை - கையூட்டல் பெற்ற இரண்டு காவல்துறை அ...