யாழ் – சென்னை விமான சேவையில் இந்தியாவின் மற்றுமொரு முன்னணி நிறுவனம் இணைந்து கொள்ள உள்ளதாக தகவல்!

யாழ்ப்பாணம் மற்றும் சென்னை விமான சேவையில் இந்தியாவின் முன்னணி நிறுவனம் இணைந்து கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் விமான சேவையானது இந்த வருட நடுப்பகுதியல் ஆரம்பமாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
விமான சேவை குறித்து மேலும் தெரியவருகையில், இந்தியாவின் உள்நாட்டு விமான நிறுவனங்களில் ஒன்றான இண்டிகோ ஏயார்லைன்ஸ் சென்னைக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையிலான விமான சேவையை ஆரம்பிக்கவுள்ளது.
இதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் அதிகாரிகளின் குழு ஒன்றும் கண்காணிப்பு விஜயம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அத்துடன் விமான சேவையினை இந்த ஆண்டு ஜுன் மாதமளவில் ஆரம்பிப்பதற்கான சாத்தியம் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
வீதி ஒழுங்கு சட்டம் நாடு முழுவதும் அமுல்படுத்தப்படும் - பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவிப்பு!
ஹட்டன் நகரிலுள்ள 3 ஆயிரத்திற்கும் அதிகமான குடிசை வீடுகளை அகற்றி நிரந்தர வீடுகளை அமைக்க பிரதமர் நடவடி...
வங்காள விரிகுடாவில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு - கடற்றொழிலிலாளர்களுக்கு வளிமண்டலவியல் திணைக்க...
|
|