யாழ் சிறையில் தொலைபேசி பாவனை முற்றாக தடை – சிறைச்சாலைகள் ஆணையாளர் !

Sunday, July 26th, 2020

யாழ்ப்பாண சிறைக்குள் தொலைபேசி பாவனை முற்றாக நிறுத்தப்பட்டுவிட்டதாக சிறைச்சாலைகள்  ஆணையாளர் சந்தன எக்க நாயக்க தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண சிறைச்சாலையின் செயற்பாடுகள் தொடர்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே ஆணையாளர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்குள் தொலைபேசி பாவனை முற்றாக நிறுத்தப்பட்டு தற்போது தொலைபேசி பாவனை பூச்சிய நிலையில் காணப்படுகின்றது. இதன் காரணமாக யாழ்ப்பாண சிறையில் போதை பொருள் தொடர்பான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளவர்களுக்கும் சிறைச்சாலைக்கு வெளியில்  போதைப்பொருள் கடத்தல்,  போதைப் பொருள் விற்பனையில் ஈடுபடுவோருக்கு மிடையில்  எந்த தொடர்பும் இருக்க வாய்ப்பில்லை என  தெரிவித்துள்ளார்.

அத்துடன் சிறைச்சாலையில் கைதிகளின் நலன் சரியாக பேணப்படுகிறது. குடிநீர் மற்றும் ஏனைய அத்தியாவசிய தேவைகள் யாவும் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் மற்றும்  சிறைச்சாலை அத்தியட்சகரினால் சிறப்பாக செயற்படுத்தப்படுகிறது. ஏனைய சிறைச்சாலைகளோடு ஒப்பிடும் போது யாழ்ப்பாண சிறைச்சாலையில் கைதிகளுக்கான அனைத்து வசதிகளும் மேற்கொள்ளப்படுகின்றது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: