யாழ்.சிறைச்சாலையில் விருந்தினர் விடுதி சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் உப்புல் தெனியவினால் வைபவரீதியாக திறந்துவைப்பு!

யாழ்.சிறைச்சாலை வளாக விருந்தினர் விடுதி, சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் உப்புல் தெனியவினால் வைபவரீதியாக திறந்து வைக்கப்பட்டது.
இந்த விடுதியானது நேற்று இரவு, சம்பிரதாயபூர்வமாக, சிறைச்சாலைகள் ஆணையாளரால் பெயர்ப்பலகை திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டு, திறந்து வைக்கப்பட்டது.
யாழ்.லகூன்’ என்ன பெயரிடப்பட்டுள்ள குறித்த விருந்தினர் விடுதி, ஏனைய சிறைச்சாலைகளிலுள்ள சிறைச்சாலை அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் யாழ்ப்பாணத்திற்கு வருகை தரும்போது குறித்த விடுதியினை பயன்படுத்த முடியும் என யாழ்ப்பாண சிறைச்சாலையின் அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.
நிகழ்வில் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் உப்புல் தெனிய, யாழ்ப்பாண சிறைச்சாலை அத்தியட்சகர் மொகான் கருணாரட்ன மற்றும் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
தேய்காக்கான நிர்ணய விலை வர்த்தமானி அறிவிப்பு!
அறிகுறிகளே இல்லாத கொரோனா நோயாளிகள் 9 கண்டுபிடிப்பு – கந்தக்காடு புனர்வாழ்வு நிலைய ஆணையாளர் தர்ஷன ஹெட...
கொரோனா நோயாளர்களுக்கு சிகிச்சையளிக்க யாழில் புதிய விடுதிகள் தயார் - மாகாண சுகாதார பிரிவு தெரிவிப்பு!
|
|