யாழ். சாவகச்சேரியில் தனியார் பேருந்தின் சாரதி திடீர் மாரடைப்பால் மரணம்!

Wednesday, November 29th, 2017

யாழ். நெல்லியடிப் பகுதியிலிருந்து சாவகச்சேரிப் பகுதியில் இடம்பெறவுள்ள திருமண நிகழ்வொன்றுக்குச் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்தொன்று சாவகச்சேரிப் பகுதியில் குடிநீர் பெற்றுக் கொள்வதற்காகக் குழாய்கள் பொருத்துவதற்கு வெட்டப்பட்ட கிடங்கில் இன்று(29) முற்பகல் புதையுண்டது.

குறித்த சம்பவத்தைப் பார்வையிடுவதற்கு இறங்கிய குறித்த பேருந்தின் சாரதி அதிர்ச்சியடைந்த நிலையில் திடீர் மாரடைப்பு ஏற்பட்டுச் சம்பவ இடத்திலேயே மரணமாகியுளளார். இச் சம்பவத்தில் புதுத்தோட்டம் வீதி நெல்லியடி கரவெட்டியைச் சேர்ந்த 69 வயதுடைய குமாரசாமி நவரத்தினராஜா என்பவரே மாரடைப்புக் காரணமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் சடலம்  மரண விசாரணைகளுக்காகச் சாவகச்சேரி  வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பாகச் சாவகச்சேரிப் பொலிஸார் விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்

Related posts: