யாழ்.கோட்டை பகுதி அபிவிருத்தியின்போது தமிழர் கலாசாரங்கள் உறுதிப்படுத்தப்பட வேண்டும் – ஈ.பி.டி.பியின் யாழ் மாநகரசபை உறுப்பினர் இரா.செல்வவடிவேல்!

யாழ்.மாநகரின் அபிவிருத்திகளின்போது தழிழரது கலாசாரங்களை பாதுகாக்கும் வகையில் அபிவிருத்திப் பணிகள் ஒவ்வொன்றும் முன்னெடுக்கப்பட வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாநகரசபையின் உறுப்பினர் இரா.செல்வவடிவேல் வலியுறுத்தியுள்ளார்.
இன்றையதினம் யாழ்.மாநகர சபையின் மாதாந்த அமர்வு முதல்வர் ஆர்னோல் தலைமையில் ஆரம்பமானது. இதன்போது யாழ்.கோட்டை பகுதி அபிவிருத்தி தொடர்பிலான விவாதத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் –
யாழ்ப்பாணம் கோட்டைப் பிரதேசம் மற்றும் அதனை அண்டிய கடற்கரை பகுதியும் அபிவிருத்தி செய்யப்படும் போது எமது பாரம்பரிய கலாசாரங்கள் மற்றும் பண்பாடுகள் அழியாதவண்ணம் உறுதிப்படுத்தப்படுவதுடன் கலாசார சீரழிவுகள் இடம்பெறாத வகையிலும் அவை மேற்கொள்ளப்பட வேணடும்.
தற்போது குறித்த பிரதேசம் யாழ்ப்பாணத்தின் சுற்றுலாத் தளமாக விளங்குவதால் அதிகளவான மக்கள் நாளாந்தம் வந்துசெல்கின்றனர். இதன்போது கலாசார சீர்கேடுகள் பல நாளாந்தம் நடைபெறுவதை அவதானிக்க முடிகின்றது.
அந்தவகையில் தற்போது குறித்த பகுதி மேலும் அபிவிருத்தி செய்யப்படவுள்ளதால் மேலும் பல சீர்கேடுகள் நடைபெற வாய்பபுள்ளது.
எனவே இத்தகைய கலாசார சீர்கேடுகளுக்கு இடம்கொடாது எமது பாரம்பரியங்களை பாதுகாக்கும் வகையில் ஒவ்வொரு செயற்பாடுகளும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என அவர்; மேலும் தெரிவித்திருந்தார்.
குறித்த கோரிக்கை சபையில் ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன் தமிழர் கலாசாரங்களை முழுமையாக பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேலும் உறுதி செய்வதுடன் கலாசார சீர்கேடுகளை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் சபையில் தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|