யாழ் – கொழும்பு புகையிரத சேவை பாதிப்பு

Friday, April 29th, 2016

காங்கேசன்துறையிலிருந்து புறக்கோட்டை நோக்கிப் பயணித்த தேசத்திற்கு மகுடம் என்ற புகையிரதம் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை சாலியபுர பிரசேதத்தில் வைத்து தண்டவாளத்தை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன் காரணமாக கொழும்பு – யாழ்ப்பாணம் புகையிரத சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் புகையிரத சேவையை வழமைக்கு கொண்’டுவரும் முயற்சிகளில் அதிகாரிகள் ஈடுபட்டிருப்பதாகவும் திணைக்களம் கூறியுள்ளது.

Related posts: