யாழ் – கொழும்பு சொகுசு பஸ் சேவைக்கு 15000 ரூபா தண்டம்!

Thursday, July 13th, 2017

யாழ்ப்பாணம் – கொழும்பு பயணிகள் பேருந்து சேவையை மேற்கொள்ளும் அதி சொகுசு பேருந்துகள் வெள்ளவத்தை பகுதியில் தரித்துநிற்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் தடையை மீறி நிறுத்தப்பட்டதால் 15000 ரூபா தண்டமும் அறவிடப்பட்டுள்ள சம்பவமொன்று நடைபெற்றுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது –

யுத்தத்திற்கு பின்னரான காலப்பகுதியில் வெள்ளவத்தைப் பகுதியில் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கான சேவையை மேற்கொள்ளும் அதிசொகுசு பேருந்துகள் சேவையை முடித்தக்கொண்டதன் பின்னர் தரித்துக்கொள்வது வழமை. ஆனால் தற்போது கொழும்பு புறக்கோட்டைப்பகுதியில் அவற்றை தரிக்குமாறு கூறப்பட்டுள்ளதுடன் குறித்த தரிப்பிடத்தில் நிறுத்தப்படாது, வெள்ளவத்தைப் பகுதியில் தரிப்பதை தடுப்பதற்காக தனியார் பேருந்து சங்கத்தினர் குறித்த நடைமுறையை கொண்டுவந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நடைமுறையால் வெள்ளவத்தைப்பகுதியூடாக நீண்டகாலமாக தமது பயணங்களை மேற்கொண்டுவந்த பயணிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது

Related posts: