யாழ்.கொழும்புத்துறை கடலுக்கு அதிகாலை குளிக்கச் சென்ற முதியவர் சடலமாக மீட்பு!

Tuesday, August 10th, 2021

கொழும்புத்துறை உதயபுரம் கடலுக்கு அதிகாலை குளிக்கச் சென்ற முதியவர் ஒருவர் காலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

இன்று அதிகாலை 5.30 மணியளவில் கடலுக்குச் குளிக்கச் சென்ற இவர் நீண்ட நேரமாகியும் காணாதநிலையில் காலை  8.30 மணியளவில் சடலமாக கரையொதுங்கினார்.

அப்பகுதியை சேர்ந்த மனுவேல் செபஸ்டியன் என்கிற வயது 65 வயதான முதியவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாண பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்

Related posts: