யாழ்.குடாநாட்டு மக்களுக்கு வாழ்வியலை தேடிக்கொடுப்பதற்கு நாம் நடத்திய போராட்டங்கள் சொல்லில் அடங்காது – வி.கே.ஜெகன்

பல தோழர்களின் உயிர் இழப்புகளுக்கு மத்தியிலும் பல்வேறுபட்ட இடர்பாடுகளையும் தடைகளையும் தாண்டி குடாநாட்டின் அபிவிருத்திக்காக அயராது உழைத்த எமக்கு இன்றைய தேசிய எழுச்சி மாநாடு அவற்றின் பெறுபேறுகளை மீட்டிப்பார்ப்பதற்கான சந்தர்ப்பத்தை வழங்கியுள்ளது.
வெளியில் சென்றால் திரும்பி வரமுடியாது என தெரிந்திருந்தும் வாழ்வுக்காய் வழி தேடிக்கொண்டிருந்த எமது யாழ்.குடாநாட்டு மக்களுக்கு வாழ்வியலை தேடிக்கொடுப்பதற்கு நாம் நடத்திய போராட்டங்கள் சொல்லில் அடங்காது.
அத்தகைய இன்னல்களுக்குள் நின்றும் தயக்கமேதும் இல்லாது மக்களது தேவைகளை பூர்த்தி செய்துகொடுக்க உழைத்துக்கொண்டிருக்கும் எமது செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சிகளின் பெறுபேறுகளாகத்தான் இன்று தலைநிமிர்ந்து பல ஆயிரம் அபிவிருத்திகளுடன் நிற்கின்றது இந்த குடாநாடு.
எனவே இந்த மாநாட்டின் மூலமாக நாம் எமது பகுதியை ஒரு வளமான பகுதியாக உருவாக்கி மேலும் வலுப்படுத்தும் நோக்குடனேயே பரந்தளவிலான கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஒரு நீடித்த சேவையையும் தூரநோக்குள்ள நகர்வுகளையும் செய்ய நாம் அர்ப்பணிப்புடன் உழைப்போம் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் கா வேலும்மயிலும் குகேந்திரன் (ஜெகன்) தெரிவித்தார்.
Related posts:
|
|