யாழ்.  குடாநாட்டில் மரக்கறிகளின் விலைகள் அதிகரிப்பு!

Friday, June 3rd, 2016

யாழ். குடாநாட்டில் மரக்கறிகளின் விலைகள் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்வதால் பொதுமக்கள் செய்வதறியாது திண்டாடி வருகின்றனர்.
யாழ். குடாநாட்டின் பிரதான சந்தையான திருநெல்வேலி பொதுச் சந்தை, மருதனார்மடம் பொதுச் சந்தை, சுன்னாகம் மத்திய  சந்தை ஆகிய சந்தைகளில் தற்போது ஒரு கிலோ கத்தரி-400 ரூபாவாகவும், ஒரு கிலோ கரட்-260 ரூபாவாகவும், ஒரு கிலோ கோவா-160 ரூபாவாகவும் என அனைத்து மரக்கறி வகைகளும் நூறு ரூபாவுக்கு மேல் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
அண்மையில் தொடர்ச்சியாகப் பெய்த அடை மழை காரணமாக யாழ். குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்டு வந்த சிறுபோக விவசாயச் செய்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தது. இதன் எதிரொலியாகவே மரக்கறிகளின் விலைகள் அதிகரித்துள்ளன.
fab24081-b798-47e4-853e-c66023b49a3e f698500b-6587-4314-960c-4489aaba7cfc