யாழ். குடாநாட்டில் செவ்விளநீருக்கு பற்றாக்குறை!

Tuesday, April 10th, 2018

யாழ். குடாநாட்டில் செவ்விளநீருக்குப் பற்றாக்குறையும் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தற்போதைய கடும் வறட்சி வெப்பத்தினால் மக்கள் செவ்விளநீரைப் பயன்படுத்தி வருகின்றமையினால் அவற்றின் விலை அதிகரித்தும் காணப்படுகின்றன. ஒரு செவ்விளநீர் சுமார் 120 ரூபா முதல் 150 ரூபா வரைக்கும் விற்கப்படுகின்றன.

தேங்காயின் விலை அதிகரிப்பின் காரணத்தினால் தான் செவ்விளநீருக்கும் பற்றாக்குறை ஏற்படுவதுடன் தென்பகுதியில் இருந்தும் குடாநாட்டுக்கு செவ்விளநீர் போதியளவு வந்து சேராத நிலையும் இதற்கு காரணம் என்று இளநீர் விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Related posts: