யாழ்.குடாநாட்டில் கடந்த நான்கு மாதங்களில் வீதி விபத்துக்களில் 13 பேர் உயிரிழப்பு

யாழ்.குடாநாட்டின் ஒன்பது பொலிஸ் நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளிலும் கடந்த நான்கு மாதங்களில் வீதி விபத்துக்களில் 13 பேர் உயிரிழந்துள்ளதுடன் 16 ஆயிரத்து 88 போக்குவரத்து மீறல் குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகப் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
தலைக்கவசம் அணியாமை, சாரதி அனுமதிப்பத்திரமின்றி வாகனம் செலுத்தியமை, போக்குவரத்து விதிமுறைகளை மீறிப் பயணம் செய்தமை போன்ற குற்றச்சாட்டுக்களில் கடந்த நான்கு மாதங்களில் 16,088 பேருக்கு எதிராகச் சட்ட
நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது.
கடந்த ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை வீதி விபத்துக்களில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த விபத்துக்களில் 35 படுகாயங்கள் ஏற்பட்டுள்ளதுடன் 51 சிறுகாயங்களும் ஏற்பட்டுள்ளதாகப் புள்ளிவிபரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.
Related posts:
பாடசாலை சூழலை சுத்தமாக்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பிக்குமாறு அமைச்சர் ராஜித்த சேனாரத்ன பணிப்புரை !
வாக்காளர் இடாப்பு பிரதிகளை இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ள முடியும் - தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப...
பொருளாதார நெருக்கடிக்கு கொரோனாவே முக்கிய காரணம் - நாட்டை முடக்காவிட்டால் பொருளாதார நெருக்கடியில் இரு...
|
|