யாழ். குடாநாட்டிலுள்ள இளைஞர், யுவதிகளின் தொழில் முயற்சி அபிவிருத்தியினைப்  பெற்றுக்கொடுக்கும் வகையிலான வேலைத்திட்டம் ஆரம்பம்!

Thursday, September 15th, 2016

யாழ். மாவட்டச்  செயலகம்,யாழ் முகாமையாளர் சம்மேளனம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்திலுள்ள இளைஞர், யுவதிகளின் தொழில் முயற்சி அபிவிருத்தியினைப்  பெற்றுக்கொடுக்கும் வகையிலான வேலைத்திட்டம் நேற்றுச் செவ்வாய்க்கிழமை (13) பிற்பகல்-03  மணியளவில் யாழ் .யூரோவில் மாநாட்டு மண்டபத்தில் அதன் இணைப்பாளர் ப.நிரஞ்சன் தலைமையில் ஆரம்பமாகி இடம்பெற்றது.

இதன் போது யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன், வடமாகாண சபையின் அவைத்தலைவர் சி.வீ.கே.சிவஞானம் ஆகியோர்  பிரதம விருந்தினர்களாகக் கலந்துகொண்டு தொழில் முயற்சிக்கான அபிவிருத்திச்  செயற்றிட்டத்தினை சம்பிரதாய ஆரம்பித்துவைத்தனர்.

யாழ். மாவட்டத்திலுள்ள 15 பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தொழில் வாய்ப்பினை எதிர்பார்த்திருக்கும்  இளைஞர், யுவதிகள்  இந்த நிகழ்வில்  கலந்துகொண்டனர்.

snapshot239 (1)

Related posts: