யாழ். குடாநாட்டின் சில பிரதேசங்களில் நாளை மின் விநியோகம் தடைப்பட்டிருக்கும்!
Saturday, October 15th, 2016
மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக யாழ். குடாநாட்டின் சில பிரதேசங்களில் நாளை ஞாயிற்றுக் கிழமை(16) காலை-08.30 மணி முதல் பிற்பகல்-05.30 மணி வரை மின் விநியோகம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாண மின் பொறியிலாளர் தெரிவித்துள்ளார்.
இதன் படி யாழ். சிறைச் சாலை, யாழ். பொலிஸ் நிலையம், யாழ்.துரையப்பா விளையாட்டங்கு, யாழ். பல்கலைக் கழகக் கலைப்பீடம், தெல்லிப்பழை, மாதனை, வில்லூன்றி, கேணியடி, நாவாந்துறையின் ஒரு பகுதி , முத்தமிழ் வீதி, மீனாட்சியம்மன் கோவிலடி, இளவாலை, வித்தகபுரம், பெரியவிளான், அளவெட்டியின் ஒருபகுதி, சேத்தான் குளம் ஆகியவிடங்களில் மின் விநியோகம் தடைப்பட்டிருக்குமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
நாட்டின் பல பாகங்களிலும் இன்றும் இடியுடன் கூடிய மழை – அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் ...
கோப் குழுவினால் பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழுவுக்கு அழைப்பு!
கால்நடை வளர்பாளர்கள் நம்பிக்கை வீண்போகாது - கட்டையடம்பன் மேய்ச்சல் நில பிரச்சினை தொடர்பில் ஈ.பி.டி.ப...
|
|