யாழ். குடாநாட்டின் சில பிரதேசங்களில் இன்று மின்தடை 

Tuesday, June 20th, 2017

மின்விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக யாழ். குடாநாட்டின் சில பிரதேசங்களில் இன்று செவ்வாய்க்கிழமை(20) மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, இன்று காலை-09.30 மணி முதல் மாலை-05 மணி வரை மருதங்கேணி, வத்திராயன், உடுத்துறை, கொடுக்குழாய், ஆழியவளை, வெற்றிலைக்கேணி, கட்டைக்காடு இராணுவ முகாம் ஆகிய பிரதேசங்களில் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சாரசபை மேலும் தெரிவித்துள்ளது.

Related posts: