யாழ். குடாநாட்டின் சில பிரதேசங்களில் நாளை மின்தடை !

மின்விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக யாழ்.குடாநாட்டின் சில பிரதேசங்களில் நாளை சனிக்கிழமை (06) காலை-08.30 மணி முதல் மாலை-06 மணி வரை மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இதன்படி , காரைநகர் கடற்படை முகாம் , ஊரி, களபூமி, காரைநகர் இலங்கை போக்குவரத்துச் சபைப் பிரதேசம், தோப்புக்காடு , நெடுந்தீவு, நெடுந்தீவு தேசிய நீர் வழங்கல் வடிகால் சபை, ஊர்காவற்துறை, ஊர்காவற்துறை நீதிமன்றக் கட்டடத் தொகுதி, நாரந்தனை, நாரந்தனை நீர்ப் பாசனத் திணைக்களம், மயிலப்புலம், மடத்துவெளி, ஆலடிச் சந்தி,புங்குடுதீவு, புங்குடுதீவு கடற்படை முகாம், இறுப்பிட்டி, குறிகட்டுவான், செட்டிப்புலம், வங்களாவடி, வேலணை ஆகியவிடங்களில் இந்த மின்தடை அமுலிலிருக்குமெனவும் இலங்கை மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது.
Related posts:
நீர்க் கட்டணம் அதிகரிக்கும்
நாட்டை கட்டியெழுப்ப ஆராய்ச்சித் துறைகளின் ஒத்துழைப்பு தேவை!
பொலிஸார் மீது குண்டுத் தாக்குதல் - துன்னாலையை சேர்ந்தவர் கைது!
|
|