யாழ். குடாநாட்டின் சில இடங்களில் நாளை மின்தடை!

Friday, June 24th, 2016

மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக யாழ். குடாநாட்டின் சில பிரதேசங்களில் நாளை சனிக்கிழமை(25-06-2016) காலை-8.30 மணி முதல் மாலை-5.30 மணி வரை மின் விநியோகம் தடைப்பட்டிருக்குமென வடமாகாண மின் பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.

இதன் படி நாளை மேற்குறிப்பிட்ட நேரத்தில் தெல்லிப்பழை வைத்தியசாலை, தெல்லிப்பழைப் புற்றுநோய் வைத்தியசாலை, குப்பிளான் , மயிலங்காடு, கல்வியங்காடு இலங்கை நாயகி கோவிலடி போன்ற இடங்களில் மின்சாரம் தடைப்படவுள்ளது.

அத்துடன் கிளிநொச்சியின் சில பிரதேசங்களிலும் நாளை மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது.

Related posts: