யாழ். குடாநாட்டின் சில இடங்களில் நாளை மின்தடை!
Saturday, September 24th, 2016
மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக யாழ். குடாநாட்டின் சில பிரதேசங்களில் நாளை ஞாயிற்றுக்கிழமை(25) காலை-08.30 மணி தொடக்கம் மாலை-05.30 மணி வரை மின் விநியோகம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாண மின்பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, நாளை மாதவனைப் பிரதேசம், வில்லூன்றி, பண்ணைப் பிரதேசம், உடுப்பிட்டி வீ.சி, நாச்சிமார் கோவிலடி, எள்ளங்குளம், இலந்தைக் காடு, கொற்றாவத்தை, பொலிகண்டி, ஆலடி, நெடியகாடு, வெள்ள றோட், உடுப்பிட்டிச் சந்தி, உடுப்பிட்டி நாவலடி, வன்னிச்சி அம்மன் கோவிலடி, பாரதிதாசன் வாசிகசாலையடி,, கம்பர்மலை, பழைய பொலிஸ் நிலையம், வல்வெட்டித் துறை, உடுப்பிட்டி வாசிகசாலைச் சந்தி, வல்லை வீதி, பொக்கணை, கெருடாவில். தொண்டைமானாறு, மயிலியதனை, சிதம்பரா, அக்கரை, பாரதி வீதி, ஊர்காவற்துறை பிரதேசம், நாரந்தனை, மயிலப் புலம், மடத்து வெளி, ஆலடிச் சந்தி, புங்குடுதீவு, இறுப்பிட்டி, குறிகாட்டுவான், செட்டிப்புலம், வங்காளவடி, வேலணை, புங்குடுதீவு கடற்படை முகாம், ஊர்காவற்துறை நீதிமன்றக் கட்டடத் தொகுதி, நாரந்தனை நீர்ப்பாசனத் திணைக்களம் ஆகிய இடங்களில் மின்விநியோகம் தடைப்பட்டிருக்குமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|