யாழ் . குடாநாட்டின் சிலவிடங்களில் நாளை மின் தடை!

Saturday, July 16th, 2016

மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக யாழ். குடாநாட்டின் சிலவிடங்களில் நாளை ஞாயிற்றுக் கிழமை(17) மின் விநியோகம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சாரசபையின் வடமாகாண மின் பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.

இதன்படி , நாளை ஞாயிற்றுக் கிழமை(17) காலை- 8.30 மணி முதல் மாலை- 5.30 மணி வரை கொக்குவில், ஆனைக் கோட்டை, நவாலி அட்டகிரி, வேம்படிச் சந்தியிலிருந்து சத்திரத்துச் சந்தி வரையான ஆஸ்பத்திரி வீதி, கந்தப்ப சேகரம் வீதி, மகாத்மாகாந்தி வீதி, முனீஸ்வரன் வீதி, ஆஸ்பத்திரி வீதிச் சந்தியிலிருந்து வின்சர் சந்தி வரையான கஸ்தூரியார் வீதி, மின்சார நிலைய வீதி, பெரிய கடை வீதி, வேக்கை, யாழ். போதனா வைத்தியசாலை, யாழ். கொமர்ஷல் வங்கி, யாழ். தேசிய சேமிப்பு வங்கி, யாழ். இலங்கை வாங்கி, யாழ். ரில்கோ விடுதி, யாழ்ப்பாணம் சுகாதாரத் திணைக்களம், யாழ். கார்கில்ஸ் பூட் சிற்றி, யாழ். வைத்தியசாலை, யாழ். விடுதி, யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத் தங்குமிட விடுதி ஆகிய இடங்களிலேயே இவ்வாறு மின் விநியோகம் தடைப்பட்டிருக்குமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: