யாழ் .குடாநாட்டின் சிலவிடங்களில் இன்று மின்தடை!

Sunday, September 4th, 2016

மின்விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக இன்று ஞாயிற்றுக்கிழமை(04) யாழ். குடாநாட்டின் சிலவிடங்களில் மின் விநியோகம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாண மின் பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.

இதன் படி இன்று காலை-08.30 மணி முதல் மாலை-5.30 மணி வரை உடுவில், மருதனார்மடம், ரொட்டியாலடி,அம்பலவாணர் வீதி,பெரிய மதவடி, இலங்கை வங்கி முன் ஒழுங்கை, இணுவில், சங்குவேலி, பிப்பிலை, கட்டுடை, உப்புமடம், தாவடிச் சந்தி, பத்தனை, மாப்பியன், சுதுமலை ,மானிப்பாய்,சீரணி, சண்டிலிப்பாய், ஆலங்குளாய், கந்தரோடை, அளவெட்டி, மாகியப்பிட்டி, யாழ். நுண்கலைப் பீடம் ஆகிய இடங்களிலேயே இவ்வாறு மின்சாரம் தடைப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

1-Copy5-620x336

Related posts: