யாழ். குடாநாட்டின் சிலஇடங்களில் நாளை மின்தடை !

Saturday, November 5th, 2016

மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக யாழ். குடாநாட்டின் சிலவிடங்களில் நாளை ஞாயிற்றுக்கிழமை(06) காலை- 08.30 மணி முதல் பிற்பகல்-05.30 மணி வரை மின் விநியோகம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாண மின்பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, புன்னாலைக்கட்டுவன், ஈவினை, குரும்பசிட்டி, ஊரெழு, அச்செழு, வாகையடி, நிலாவரை, குட்டியப்புலம், நவக்கிரி, புத்தூர், கலைமகள் சந்தி, விக்கினேஸ்வரா மட்டுவில் வீதி, வீரவாணி, ஊறணி, வாதரவத்தை, பெரிய பொக்கணை, அச்சுவேலி, கைத்தொழிற் பேட்டை, கைத் தொழிற் பேட்டை-1, கைத்தொழிற்பேட்டை-11, ஆவரங்கால், செல்வநாயகபுரம், கதிரிப்பாய், தம்பாலை, இடைக்காடு, விஜிதா அரிசி ஆலைப் பிரதேசம், மட்டுவில், கல்வயல், முத்துமாரியம்மன் கோவிலடி, சரசாலை வடக்கு,தாக்கம், கொத்தியாவத்தை, இரும்பு மதவடி, மனோகரா, சக்களாவத்தை, தேவரையாளி  ஆகியவிடங்களில் மின் விநியோகம் தடைப்பட்டிருக்குமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

201608081633568362_Madurai-tomorrow-power-cut_SECVPF

Related posts: