யாழ். குடாநாடு ஹர்த்தால் காரணமாக முற்றாக ஸ்தம்பிதம்!

Tuesday, October 25th, 2016

கடந்த வியாழக்கிழமை(20) இரவு யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் யாழ். பல்கலைக் கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த நிலையில் மாணவர்களின் படுகொலைக்கு நீதி கோரி இன்று செவ்வாய்க்கிழமை வடக்கு மாகாணத்தில் பூரண ஹர்த்தால் இடம்பெறுகின்ற நிலையில் யாழ். குடாநாடு ஹர்த்தால் காரணமாக முற்றுமுழுதாக ஸ்தம்பித்துள்ளது.

ஹர்த்தால் காரணமாக அரச, தனியார் பேருந்துகள் முற்றாக இயங்கவில்லை. யாழ்.திருநெல்வேலிச் சந்தி, மருதனார்மடம், சுன்னாகம், சங்கானை, சாவகச்சேரிப் பொதுச் சந்தைகள், மருந்தகங்கள், உணவகங்கள், வர்த்தக நிறுவனங்கள், அரச, தனியார் நிறுவனங்கள் அனைத்தும் ஹர்த்தால் காரணமாக இயங்கவில்லை. இதனால், பொதுமக்களின் அன்றாடச் செயற்பாடுகள் யாவும் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

unnamed

Related posts: