யாழ், கிளிநொச்சியின் சில பகுதிகளில் இன்று மின்தடை !

Friday, September 29th, 2017

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியின் சில பகுதிகளில் இன்று வெள்ளிக்கிழமை(29) மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இதன் படி, இன்று காலை-08. 30 மணி முதல் மாலை-05 மணி வரை யாழ். மாவட்டத்தின் மருதங்கேணி, வத்திராயன், உடுத்துறை, கொடுக்குழாய், ஆழியவளை, வெற்றிலைக்கேணி, வெற்றிலைக்கேணி இராணுவ முகாம், கட்டைக்காடு, கட்டைக்காடு இராணுவ முகாம், கேவில் ஆகிய பகுதிகளிலும்,
இன்று காலை-08 மணி முதல் மாலை-05 மணி வரை கிளிநொச்சியின் கோவிந்தன் கடைச் சந்தி, பன்னன் கண்டி, வட்டக்கச்சி, கறுப்பிக்குளம், உடச்சகண்டி, மாயவன் ஊர், இராமநாதபுரம், சாந்தபுரம், இரணைமடு, திருவையாறு, இரணைமடு விமானப்படை-1 மற்றும் விமானப்படை-2 முகாம்கள், இரணைமடு SFHQ, வட்டக்கச்சி பாம்  ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடைப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை மேலும் குறிப்பிட்டுள்ளது.

Related posts: