யாழ்.கிளிநநொச்சி தேர்தல் மாவட்டத்தில் 8 முறைப்பாடுகள் பதிவு!

யாழ்.மாவட்டத்தில் இதுவரை தேர்தல் முறைகேடுகள் தொடர்பான 8 முறைப்பாடுகள் கிடைத்திருப்பதாக மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலக தகவல்கள் தெரிவித்துள்ளன.
2020ஆம் ஆண்டிற்கான நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பில் இதுவரை யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மட்டும் 8 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
அவ்வாறு கிடைக்கப்பெற்ற அனைத்து முறைப்பாடுகளுமே விதிமுறை மீறல் தொடர்பான முறைப்பாடுகளாகவே காணப்படுகின்றதாகவும் கூறப்படுகின்றது. இந்த நிலையில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது
Related posts:
அமுலுக்கு வரும் அரச சேவையாளர்களின் பணி நேர மாற்றம் !
சமூக வலைத்தள செயற்பாட்டாளர்களிடம் ஜனாதிபதி கோரிக்கை!
அரசாங்கத்தை குற்றம் சுமத்தும் இலங்கை ஆசிரியர்கள் சங்கம்!
|
|