யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஆவணப்படத் திரையிடல் காட்சியும், திறந்த கலந்துரையாடலும்

Thursday, June 2nd, 2016

யாழ்ப்பாணப்  பொதுநூலகம் காடையர்களால் எரிக்கப்பட்டு  நேற்றுப் புதன்கிழமை (01-6-2016)   35 வருடங்கள் பூர்த்தியாகின்றமையை  முன்னிட்டு ஈழத்தின் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஆவணப் பட இயக்குனர் எல். சோமிதரனின் இயக்கத்தில் கடந்த-2006 ஆம் ஆண்டு தயாரித்து வெளியிடப்பட்ட யாழ்ப்பாணப் பொதுநூலக எரிப்புத் தொடர்பான ” எரியும் நூலகம்” எனும் தலைப்பிலான ஆவணப்படத் திரையிடல் காட்சியும், திறந்த கலந்துரையாடலும் நேற்றுப்  புதன்கிழமை மாலை-4.45 மணியளவில் யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்றது.

இரண்டு நிமிட மெளனப் பிரார்த்தனையுடன் ஆரம்பமாகிய நிகழ்வில் சிரேஷ்ட ஊடகவியலாளர் எஸ். தயாபரன் கருத்துரை  நிகழ்த்தினார்.  அதனைத் தொடர்ந்து ஆவணப் படம் பெரிய திரையில் காண்பிக்கப்பட்டது.  47 நிமிடங்களை உள்ளடக்கிய குறித்த ஆவணப் படத்தில்  யாழ்ப்பாணப் பொதுநூலகம் எரிக்கப்படுவதற்கு முன்னரிருந்த நிலை, பொதுநூலகம் எரிப்பின் பின்னணி, பொதுநூலக எரிப்புத் தமிழ்ச் சமூகத்தினர் மத்தியில் ஏற்படுத்திய தாக்கம் உள்ளிட்ட பல்வேறு விடயங்களையும் உள்ளடக்கி இந்த ஆவணப் படம் தயாரிக்கப்பட்டுள்ளது.

ஆவணப் படம் திரையிடல் முடிவுற்றதைத் தொடர்ந்து இடம்பெற்ற திறந்த கலந்துரையாடலில் குறித்த ஆவணப் படத்தின்  இயக்குனர் எல். சோமிதரன், யாழ்ப்பாணப் பொதுநூலக வாசகர் வட்டத் தலைவர் தங்க முகுந்தன், யாழ். பல்கலைக் கழக ஓய்வு நிலை சிரேஷ்ட உதவிப் பதிவாளர் ஆர். கிருஷ்ணகுமார்,மூத்த ஊடகவியலாளர் என். பரமேஸ்வரன், யாழ். மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் எஸ். விஜயகாந்த், இளம் கலைஞர்கள் , குறும்பட இயக்குனர்கள் ,ஊடகவியலாளர்கள்  உள்ளிட்டோர் கலந்து  கொண்டு “யாழ்ப்பாணப் பொதுநூலக எரிப்பின் பின்னர்  தமிழ்ச் சமூகம் எதிர்கொள்ளும் சவால்கள் உட்படப் பொதுநூலக எரிப்புத் தொடர்பான பல்வேறு விடயங்கள் தொடர்பாகக் கருத்துக்கள் பரிமாறிக் கொண்டனர்

fadb5861-21a6-4533-a66f-bcba56e2be8f 80dd1231-3289-40dd-b0d4-69001553a401

Related posts: