யாழ் இளைஞர், யுவதிகளுக்கும் மாபெரும் தொழிற்சந்தை !

Thursday, July 19th, 2018

மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களம், யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்துடன் இணைந்து யாழ் மாவட்டத்தில் தொழில் வாய்ப்பற்றிருக்கும் இளைஞர், யுவதிகளுக்கு தொழில் மற்றும் தொழிற்பயிற்சி வாய்ப்புகளைப் பெற்றுக் கொடுப்பதற்கான மாபெரும் தொழிற்சந்தை நிகழ்வு யாழ் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையில் எதிர்வரும் 21 ஆம் திகதி காலை 8.30 மணிமுதல் பிற்பகல் 3.00 மணி வரை நடத்தவுள்ளது.

இத்தொழிற்சந்தை நிகழ்வில் ஆடைத் தொழிற்சாலை, தனியார் உற்பத்தி நிறுவனங்கள், பாதுகாப்புச் சேவை, சுப்பர் மாக்கெற், கணக்கியற்துறை, காப்புறுதித் துறை, பொலிஸ் சேவை, தாதியர், குழந்தைப் பராமரிப்பாளர், சுத்திகரிப்பாளர் மற்றும் ஹோட்டல் முகாமைத்துவம் போன்ற துறைகளுக்கான 40 இற்கும் அதிகமான நிறுவனங்கள் கலந்து கொண்டு ஆட்சேர்ப்பினையும் தொழிற் பயிற்சிகளுக்கான பதிவுகளையும் மேற்கொள்ளவுள்ளன.

எனவே தொழில் வாய்ப்புக்காக காத்திருக்கும் அனைவரும் இவ் அரிய சந்தர்ப்பத்தினை தவறவிடாது உரிய நேரத்தில் தங்கள் சுய விபரக் கோவையுடன் பங்குபற்றி பொருத்தமான தொழில் மற்றும் தொழிற் பயிற்சி வாய்ப்புக்களை பெற்றுப் பயனடையுமாறு கேட்டுக் கொள்கின்றேன். இந் நிகழ்வு தொடர்பான மேலதிக தகவல்களை 021 221 9359 இலக்க தொலைபேசியூடாக அல்லது மாவட்ட செயலக தொழில் நிலையத்தில் நேரடியாகவோ பெற்றுக்கொள்ளலாம் என யாழ் அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் அறிவித்துள்ளார்.