யாழ். இந்துக் கல்லூரி மாணவன் ஜப்பான் பயணம்!

Tuesday, April 10th, 2018

கல்வி அமைச்சினால் இளையோர் விஞ்ஞான நிகழ்ச்சித் திட்ட சக்குறா விஞ்ஞானம் எனும் திட்டத்தினூடாக யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவன் மிகுந்தன் வக்சலன் ஜப்பான் பயணமாகிறார்.

கடந்த வருடம் நடைபெற்ற க.பொ.த (உ.த) உயிரியல் பிரிவில் 3 பாடங்களிலும் திறமைச் சித்திபெற்று மாவட்ட மாகாண நிலையில் முதலாம் இடத்தையும் தேசிய ரீதியில் 9 ஆம் இடத்தையும் பெற்றுக்கொண்ட வக்சலன் சதுரங்கம், பூப்பந்து, கர்நாடக சங்கீதம், கணித ஒலிம்பியாட் போன்றவற்றில் திறமை காட்டியுள்ளார்.

யப்பான் விஞ்ஞான தொழில்நுட்ப நிறுவனத்தின் அனுசரணையுடன் ஜப்பான் சென்று அங்குள்ள விஞ்ஞான தொழில்நுட்பவியல், அறிவியல் விடயங்கள் பற்றியும் அவர்களது வாழ்க்கை முறை கலை, கலாசார விடயங்கள் பற்றியும் அறிந்து கொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. வட மாகாணத்தில் இருந்து செல்லும் ஒரே ஒரு மாணவன் இவர் எனத் தெரிவிக்கப்பட்டது.

Related posts: