யாழ். அச்சுவேலியில் இளம் குடும்பஸ்தரைக் காணவில்லை 

Saturday, June 24th, 2017

யாழ். அச்சுவேலிப் பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தரொருவர் கடந்த-19 ஆம் திகதியிலிருந்து காணாமல் போயுள்ளதாக அவரது தாயாரால் நேற்று வெள்ளிக்கிழமை(22) அச்சுவேலிப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேற்படி குடும்பஸ்தர் அச்சுவேலிப் பிரதேசத்தில் தனியார் பேருந்தொன்றின் நடத்துனராகக் கடமையாற்றி வரும் நிலையில் கடந்த-19 ஆம் திகதி பணிக்குச் சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை என அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அச்சுவேலி தெற்குப் பகுதியைச் சேர்ந்த இராசையா பாலேஸ்வரன்(வயது-40) என்பவரே இவ்வாறு காணாமற் போனவராவார்.

Related posts: