யாழ்,மன்னார், வவுனியா மாவட்டங்களின் சில பகுதிகளில் இன்று மின்தடை 

Saturday, October 21st, 2017

மின்சாரப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக வடமாகாணத்தின் யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா மாவட்டங்களின் சில பகுதிகளில் இன்று சனிக்கிழமை(21) மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இதன்பிரகாரம், இன்று காலை-08 மணி முதல் மாலை-05.30 மணி வரை யாழ். மாவட்டத்தின் பொன்னாலை, காரைநகர், காரைநகர் இராணுவ, கடற்படை முகாம், காரைநகர் கடற்படை ஜெற்றி, வடலியடைப்பு, தொல்புரம், சத்தியகாடு, கள்ள வேம்படி, சுழிபுரம், பத்தானை, கேணியடி ஆகிய பகுதிகளிலும்,
இன்று காலை-08 மணி முதல் மாலை-05.30 மணி வரை மன்னார் மாவட்டத்தின் திருக்கேதீஸ்வரம், மாந்தை மேற்கு, சிறுநாவற் குளம், நாகதாழ்வு ஆகிய பகுதிகளிலும்,
இன்று காலை- 08 மணி முதல் மாலை-05.30 மணி வரை வவுனியா மாவட்டத்தின் சாளம்பைக்குளம் பிரதேசத்திலும் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது.

Related posts:


ஊழல்வாதிக்கு அதிபர் நியமனம் வழங்கிய வடமாகாணக் கல்வியமைச்சர் - இலங்கை ஆசிரியர் சங்கம் கடும் கண்டனம்!
மூன்றாவது அலை மிக மோசமான விளைவுகளுடன் ஆரம்பம் – கட்டுப்படுத்த நாட்டு மக்கள் உச்ச அளவு ஒத்துழைப்பை வழ...
பாகிஸ்தானின் எதிர்காலம் அதன் சொந்த முயற்சியில் உள்ளது - இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்க...