யாழ்ப்பாத்தில்பொதுமக்கள் குறைகேள் மையம்!

யாழ்ப்பாணத்தில் பொதுமக்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை உடனடியாகவும் பக்கச்சார்பின்றி தீர்ப்பதற்கும் பொதுமக்கள் குறைகேள் மையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட செயலாளர்தெரிவித்துள்ளார்.
யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தலைமையில் மாவட்ட செயலகத்தில் பொதுமக்கள் குறைகேள் மையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்களின் குறைகள் மற்றும் கருத்துக்கள் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக யாழ்.மாவட்ட செயலாளர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
பொது மக்களின் தேவைகளை கேட்டறிந்து அவர்களது குறைகளை நிவர்த்தி செய்யும் பொறிமுறை ஒன்றும் வகுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொதுமக்கள் 021 222 5000 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாக அல்லது கடிதம் மூலம் தமது குறைகளை தெரிவிக்க முடியும். தகவல்கள் தொடர்பான இரகசியம் பேணப்பட்டு இறுக்கமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என யாழ்.மாவட்ட செயலாளர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்
Related posts:
ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஒத்துழைப்புடன் வர்த்தக அபிவிருத்தி!
இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் வெட்கப்பட வேண்டும் - ரோஷன் மஹானாமா!
இணுவில் விபத்து - சிறுவன் பலி : பொலிஸ் அதிகாரி கைது!
|
|