யாழ்ப்பாண மாவட்டத்திலேயே அதிகளவு விபத்துக்கள் – மோட்டார் திணைக்களத்தின் விபத்து இணைப்பிரிவு!

Thursday, February 16th, 2017

யாழ். மாவட்டத்தில் கடந்த வருடம் அதிகளவான விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக யாழ். மாவட்ட மோட்டார் திணைக்களத்தின் விபத்து இணைப்பிரிவு தெரிவித்துள்ளது.

2016ம் ஆண்டு 337 விபத்துக்கள் யாழ் மாவட்ட பொலிஸ் பிரிவினரால் உறுதிப்படுத்தப்பட்டு குறித்த விபத்து இணைபிரிவின் அறிக்கைக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த விபத்துக்களின் இறப்பு 22.2 சதவீதமாக கணக்கிடப்பட்டுள்ளது.

மேலும் குறித்த விபத்துக்களில் பெரும்பாலானவை மோட்டார் சைக்கிள் விபத்தாக காணப்படுவதோடு குறித்த விபத்துக்கள் வேகக் கட்டுப்பாடு இன்றி நடைபெற்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

புதிய ஆண்டின் ஆரம்ப காலப்பகுதியில் பாரிய விபத்துகளாக 8 பதிவாகியுள்ளதாக மோட்டார் திணைக்களத்தின் விபத்து இணைப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

201605171736365865_bus-accident-youth-death_SECVPF

Related posts: