யாழ்ப்பாண மக்களுக்கு இலங்கை மின்சார சபையின் முக்கிய அறிவிப்பு!

யாழ்ப்பாணம் பழைய பூங்கா வீதியில் உள்ள இலங்கை மின்சார சபையின் பிரதி பொது முகாமையாளர் அலுவலகத்தில் சனிக்கிழமைகளிலும் பணம் செலுத்தும் பகுதி பொதுமக்களின் நன்மை கருதி செயற்படும் என வடமாகாண பிரதிப் பொது முகாமையாளர் பொறியியலாளர் செ.பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது
எதிர்வரும் 10.06.2023 சனிக்கிழமை தொடக்கம் தினமும் காலை 9 மணிமுதல் மாலை 3 மணி வரை பணம் செலுத்தும் பகுதி திறந்து இருக்கும் என பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
இம்மாத இறுதியில் ஆசிரியர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை - கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ....
நாட்டில் கொரோனாவின் 3 ஆவது அலை ஏற்படும் அபாயம் : மரணங்களின் எண்ணிக்கையும் நாளாந்தம் உயர்வு!
இலங்கையில் 243 பெண்கள் கொலை - 128 பேரின் மரணத்திற்கு கணவன்மாரே காரணம் - ஐக்கிய நாடுகள் சபையின் சனத்த...
|
|