யாழ்ப்பாண பல்கலைக்கழக பாதுகாப்பு ஊழியர்கள் கவன ஈர்ப்புப் போராட்டம்!

Wednesday, August 26th, 2020

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு ஊழியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு கிடைக்க வலியுறுத்தி கவன ஈர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கொரோனாத் தொற்றுக் காலப்பகுதியிலும் உயிரைத் துச்சமென மதித்துத் தாங்கள் பணியாற்றிய போதிலும், தங்கள் மீது அபாண்டமாக, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைத் தொழில் சங்கம் ஒன்று முன்வைத்துள்ளமையைக் கண்டித்தும், நீதியான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் கவனயீர்ப்பில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுவோரை தவிர ஏனைய அனைவரும் குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts: