யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!

Saturday, May 16th, 2020

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு புதிய துணைவேந்தரை தேர்ந்தெடுப்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

இதன் பிரகாரம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் புதிய முறைமையில் துணைவேந்தர் தேர்வு செய்யப்படவுள்ளார்.

பேராசிரியர் விக்னேஷ்வரன் பதவி நீக்கப்பட்ட பின்னர் தகுதி வாய்ந்த அதிகாரி ஒருவரே யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தை நிர்வகித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் புதிய துணைவேந்தரை தேர்ந்தெடுப்பதற்கான விண்ணப்பங்கள் பல்கலைக்கழக பதிவாளரால் கோரப்பட்டுள்ளது.

Related posts: