யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் ஊடகக் கற்கைகள் துறையின் புதிய துறைத் தலைவராக பூங்குழலி சிறிசங்கீர்த்தனன்!

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் ஊடகக் கற்கைகள் துறையின் புதிய துறைத் தலைவராக விரிவுரையாளர் பூங்குழலி சிறிசங்கீர்த்தனனை நியமிக்க யாழ்ப்பாண பல்கலைக்கழக பேரவை அனுமதி வழங்கியுள்ளது.
நேற்று சனிக்கிழமை (25) கூடிய மாதாந்த பேரவை கூட்டத்தின் போதே இந்த நியமனம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் ஊடகக் கற்கைகள் துறையின் துறைத் தலைவராக இருந்த பேராசிரியர் கலாநிதி சி.ரகுராம் கலைப்பீட பீடாதிபதியாக பொறுப்பேற்ற நிலையில் ஊடகக் கற்கைகள் துறையின் துறைத் தலைவர் பதவிக்கு வெற்றிடம் ஏற்பட்டது.
இந்நிலையில் ஊடகக் கற்கைகள் துறையின் பதில் துறைத் தலைவராக விரிவுரையாளர் பூங்குழலி சிறிசங்கீர்த்தன் நியமிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது துறைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
திங்கள்முதல் 1,500 பேருந்தகள் மேலதிக சேவையில் - இலங்கை போக்குவரத்து சபை அறிவிப்பு!
கொரோனா தொற்றால் வெளிநாடுகளில் சிக்கித் தவித்த மேலும் பலர் நாடு திரும்பினர்!
திருப்திகரமான வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படும் - நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச நம்பிக்கை!
|
|