யாழ்ப்பாண நகர்ப்பகுதியில் நாய்களின் தொல்லை அதிகம்!

நகர்ப்பகுதியில் நடமாடும் நாய்களினால் மக்கள் பெரும் சிரமத்தை எதிர்நோக்குகின்றனர். பஸ் தரிப்பு நிலையம், முற்றவெளி, கொட்டடி பிரதேசங்களில் இந்தக் கட்டாக்காலி நாய்களின் தொல்லை அதிகரித்துள்ளன.
கட்டாக்காலி நாய்கள் வீதிகள் மற்றும் பொது இடங்களில் கூடுதலாக நடமாடுவதால் மக்கள் நாய்த் தொல்லையால் சிரமப்பட்டு வருகின்றனர். குறிப்பாக நாய்கள் வீதிக்கு குறுக்கே ஓடிச் செல்வதனால் விபத்துக்கள் ஏற்படுகின்றன. இந்த கட்டாக்காலியாக நடமாடும் நாய்களை கட்டுப்படுத்த யாழ்.மாநகராட்சி மன்றம் முன்வர வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related posts:
சம்பூரில் சூரிய மின் உற்பத்தி நிலையத்தை அமைப்பது குறித்து ஆராய்வு!
ஜூன் மாதமளவில் சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடன் கிடைக்கும் - ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரத்தின் அட...
இந்திய விசா விண்ணப்பங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட நாட்களில் IVS மையம் மூலம் ஏற்றுக்கொள்ளப்படும் - இந்திய...
|
|