யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியிலுள்ள விற்பனை நிலையத்தில் தீ விபத்து – பல இலட்சம் பொறுமதியான பொருட்கள் தீயில் கருகி நாசம்!

Sunday, May 22nd, 2022

யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியிலுள்ள விற்பனை நிலையம் ஒன்று இன்று அதிகாலை தீப்பற்றி எரிந்து முற்றாக அழிவடைந்துள்ளது

ஸ்ரான்லி வீதியில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யும் விற்பனை நிலையமே இவ்வாறு அழிவடைந்துள்ளது.

இன்று அதிகாலை 2.30 மணிளவில் விற்பனை நிலையத்தில் திடீரென ஏற்பட்ட தீ பரவி கடை முழுவதும் பரவி முழுமையான சேதத்தை ஏற்படுத்தியது.

இதனையடுத்து தீப்பரவலை கட்டுப்படுத்துவதற்காக யாழ் மாநகர சபை தீயணைப்பு படை முயற்சிகளை மேற்கொண்டு வந்தது.

தீ பரவத் தொடங்கியபோது விற்பனை நிலையத்துக்குள் கடையில் பணியாற்றும் ஒருவர் தூங்கிக்கொண்டிருந்தாகவும் சம்பவத்தில் தீ பற்றிய நிலையில் உடனடியாக அவர் அங்கிருந்து வெளியேறி ஓடியதால் சிறிய காயங்களுடன் தப்பிக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

விற்பனை நிலையம் தீப்பற்றி எரிந்தமை தொடர்பில் மேலதிக தகவல்கள் எதுவும் வெளியாகாத நிலையில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

இதேவேளை யாழ்ப்பாணத்தில் குளிர்பான விற்பனை நிலையம் ஒன்றின் கூரையிலும் தீ பரவியுள்ளது.

யாழ்.மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவினரால் உடனடியாக அறிவிக்கப்பட்டதையடுத்து, தீயணைப்புப் பிரிவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயைக் கட்டுப்படுத்தினர்.

குறிப்பிட்ட நேரத்திற்குள் தீ கட்டுப்படுத்தப்பட்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

000

Related posts: