யாழ்ப்பாணம், வவுனியாவில் இன்று மின்தடை 

Friday, October 6th, 2017

மின்சாரப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக வடமாகாணத்தின் யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா மாவட்டங்களின் சில பகுதிகளில் இன்று வெள்ளிக்கிழமை(06) மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இதன்  பிரகாரம், இன்று காலை-08.30 மணி முதல் மாலை-05 மணி வரை  யாழ். பொன்னாலை கிருஷ்ணன் கோவிலடி, பொன்னாலை வீட்டுத் திட்டம், யாழ். காரைநகர்ச் சிவன் கோவிலடி, வலந்தலைச் சந்தி, சிவகாமி அம்மன் கோவிலடி, ஆலடி, மருதபுரம், வியாவில், கருங்காலி ஆகிய பகுதிகளிலும்,
இன்று காலை-08 மணி முதல் மாலை-05.30 மணி வரை ஈரப்பெரிய குளம், ஈரப்பெரிய குளம் படை முகாம், ஈரப்பெரியகுளம் SLBC, வேரகம, கற்குண்ட மடு, அலுத்கம, அழகல்ல, பஹல அழுத்வத்த, புபுதுகம, குருந்துப்பிட்டிய, பூ- ஓயா படை முகாம் ஆகிய பகுதிகளிலும் மின்சாரத் தடை அமுலிலிருக்குமெனவும் இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

Related posts: