யாழ்ப்பாணம் – முள்ளி பாலத்திற்கு அருகாமையில் வெடிப்பு – வீதி தாழ் இறங்கியுள்ளமையால் பொது மக்கள் அச்சம்!

Tuesday, December 14th, 2021

யாழ்ப்பாணம் – முள்ளி  பாலத்திற்கு அருகாமையில்  வெடிப்பு ஏற்பட்டு வீதி தாழ் இறங்கியுள்ளமையால் பொது மக்கள் அச்சத்துடன் பயணிக்கின்றனர்.

வடமராட்சியில் இருந்து தென்மராட்சி நோக்கி செல்லும் புலோலி- கச்சாய் வீதியிலேயே இவ்  வெடிப்பு ஏற்பட்டுள்ளது.

வடமராட்சியில் இருந்து தென்மராட்சி நோக்கி பயணிப்பவர்கள் மற்றும் தென்மராட்சியில் இருந்து வடமராட்சி நோக்கி பயணம் செய்பவர்கள் இப்பாதையை அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர்.

இவ் வீதி புனரமைப்பு செய்யப்பட்டு ஒரு வருடமே ஆகின்ற நிலையில் முள்ளி ஐய்யங்கண்டி மயானத்துக்கு அருகாமையில் உள்ள பாலத்துக்கு அருகாமையிலேயே வெடிப்பு ஏற்பட்டு வீதி கீழ் இறங்கியுள்ளது.

இது தொடர்பாக ஊடகவியலாளர்கள் தென்மராட்சி பிரதேச செயலர் மற்றும் சாவகச்சேரி பிரதேச சபையினருக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.

இதன் அடிப்படையில் தற்காலிகமான பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் இதனூடாக ஒரு வழிப் பயணத்தையே மேற்கொள்ள முடிகிறது.

அதனூடக பாரவூர்திகள் தொடர்ந்தும் பயணிப்பதால் முற்றான பயணத்தடை ஏற்பட வாய்ப்புள்ளதுடன் ஆபத்தான பயணமாக அமைந்து காணப்படுகிறது.  எனவே இது தொடர்பில் மக்கள் அவதானமாக பயணிக்குமாறு கோரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: