யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் டிஜிட்டல் தொடு திரை திறந்து வைப்பு – வைத்தியசாலையில் ஏழு நுழைவாயில்களிலும் காட்சிப்படுத்தப்படுள்ளதாகவும் தெரிவிப்பு!
Saturday, February 17th, 2024யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் டிஜிட்டல் தொடு திரை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வு நேற்று பிற்பகல் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு பகுதிக்கு முன்னால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த டிஜிட்டல் தொடு திரை நோயாளர்களின் அசௌகரியங்களை தவிர்த்து கொள்ளவும், இலகுவில் யாழ் போதனா வைத்தியசாலையின் அனைத்து பிரிவுகளையும், இடங்களையும் அறிந்து கொள்வதற்காகாகவும் நீண்ட கால திட்டமிடலின் பிரகாரம் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு பகுதிக்கு முன்னால் திறந்துவைக்கப்பட்டுள்ளது.
டிஜிட்டல் தொடுதிரையில் அனைவரும் இலகுவான முறையில் தகவல்களை பெற்றுக்கொள்ளும் விதத்தில் ஒழுங்கமைப்புகள் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இவ் தொடுதிரை வைத்தியசாலையில் ஏழு நுழைவாயில்களில் காட்சிப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
எம்.எஸ்.சீ மெசினா கப்பல் இலங்கையின் கடல் எல்லையில் இருந்து வெளியேறியது – கடற்படை அறிவிப்பு!
பற்றுச்சீட்டு விநியோகத்திலிருந்து விலகும் புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கம் - சங்கத்தின் செயலாள...
பெண்களுக்கான பொருளாதார சுதந்திரம் வழங்கப்பட வேண்டும் - வடக்கின் ஆளுநர் வலியுறுத்து!
|
|